Connect with us

துருவ நட்சத்திரம் படம் இந்த வாரமும் ரிலீஸ் இல்லை…மீண்டும் வருத்தத்தில் Chiyaan விக்ரம் ரசிகர்கள்!

Cinema News

துருவ நட்சத்திரம் படம் இந்த வாரமும் ரிலீஸ் இல்லை…மீண்டும் வருத்தத்தில் Chiyaan விக்ரம் ரசிகர்கள்!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆக்ஷன் திரில்லர் படமான துருவ நட்சத்திரம்… 7 வருடங்களுக்கு முன்பே படப்பிடிப்பு பணிகள் துவங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டு நிறுத்தப்பட்டு எடுத்தபடம் தான் இந்த துருவ நட்சத்திரம்…

இந்நிலையில் இப்படத்தை நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்தது…அதனால் ரசிகர்கள் இம்முறை மிஸ் ஆகாது என சொல்லி கொண்டாடி வந்தனர்…

இதில் ட்விஸ்ட்டாக கடைசி நேரத்தில் ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் கெளதம் மேனன் வாங்கிய ரூ.2 கோடியை கொடுக்காமல் இப்படத்தை வெளியிட கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதி மன்றம் நிபந்தனையுடன் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட உத்தரவு பிறப்பித்துள்ளது…அந்த தகவல் அதிகமாகவும் பேசப்பட்டு வளர்கின்றது…

நீதிமன்ற உத்தரவு படி குறிப்பிட்ட நேரத்திற்குள் பணத்தை கொடுக்க முடியாததால் இப்படம் நவம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியானது..இந்த முறை மிஸ் ஆகாது என அனைவரும் எதிர்பார்த்தனர்…

படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது வரை இப்படத்தின் புரோமோஷன் பணிகள் எதுவும் துவங்கவில்லை…மேலும் பிரச்னையும் நீடித்து வரும் நிலையில் இப்படத்தை மீண்டும் டிசம்பர் 8-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டம் போட்டு இருக்கின்றனர் படக்குழுவினர்..

அதனால் நிச்சயம் இப்படம் சொன்னபடி டிசம்பரில் வரும் என தகவல் வந்து இருக்கின்றது..இம்முறையாவது வருமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top