Connect with us

தங்கம் வென்ற கபடி வீராங்கனை கார்த்திகாவை சந்தித்த துருவ் விக்ரம்

20957767-dhruv

Cinema News

தங்கம் வென்ற கபடி வீராங்கனை கார்த்திகாவை சந்தித்த துருவ் விக்ரம்

Duruv Vikram: சமீபத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் கபடி பிரிவில் போட்டியிட்ட வீரர்கள் தங்கப்பதக்கம் வென்றனர். இந்த வெற்றியில், தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தங்கம் வென்ற வீரர்கள் சென்னை திரும்பும் நேரத்திலேயே தமிழ்நாட்டுத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியார்கள்.

இதையடுத்து, தங்கம் வென்ற கபடி வீராங்கனை கார்த்திகாவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பலரும் முன்வருகின்றனர். அதற்குள், சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பைசன் திரைப்படத்தின் கதாநாயகனும், நடிகர் விக்ரமின் மகனுமான துருவ் விக்ரம் கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பு சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு, ரசிகர்களிடம் பெரும் அசத்தலையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. கார்த்திகாவின் சாதனை தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பெரும் ஊக்கம் அளிக்குமென்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரஜினி Fans Festival Mode ON! ‘அண்ணாமலை’ மீண்டும் பாக்க Ready-aa?

More in Cinema News

To Top