Connect with us

வெளியாகவிருக்கும் தனுஷின் கேப்டன் மில்லர் பட ட்ரைலர்! எப்போ தெரியுமா?!

Cinema News

வெளியாகவிருக்கும் தனுஷின் கேப்டன் மில்லர் பட ட்ரைலர்! எப்போ தெரியுமா?!

தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’U/A’ சான்றிதழ் அளித்துள்ள நிலையில் இந்த படத்தில் 14 இடங்களில் சென்சார் அதிகாரிகள் கத்தரி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் என்று உருவாகியுள்ளது. சென்சாரில் இந்தப்படம் ’U/A’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படம் பொங்கலுக்கு வெளியாவதை முன்னிட்டு, ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நிகழ்ச்சி 3ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தனுஷ், ப்ரியங்கா மோகன், சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், GV பிரகாஷ் குமார் உட்பட கேப்டன் மில்லர் படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களும் இந்நிகழ்ச்சியை காண திரண்டு வந்திருந்தனர். இந்தநிலையில் படத்தின் ட்ரைலர் நாளை ஜனவரி 6 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top