Connect with us

“அருண் மாதேஸ்வரன் இன்னொரு வெற்றிமாறன்..! நடிகர் தனுஷ் சொன்ன விஷயம்!”

Cinema News

“அருண் மாதேஸ்வரன் இன்னொரு வெற்றிமாறன்..! நடிகர் தனுஷ் சொன்ன விஷயம்!”

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ராக்கி, சாணி காயிதம் படங்கள் மூலம் பிரபலமானவர் அருண் மாதேஸ்வரன். இந்த இரண்டு படங்களுமே ரத்தம் தெறிக்க தெறிக்க அதிக வன்முறை காட்சிகளுடன் உருவாகியிருந்தது. அதேபோல் தான் தனுஷின் கேப்டன் மில்லரும் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. இது அருண் மாதேஸ்வரனின் மூன்றாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் 12ம் தேதி வெளியாகவுள்ளதை முன்னிட்டு, ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தனுஷ், ப்ரியங்கா மோகன், சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், GV பிரகாஷ் குமார் உட்பட கேப்டன் மில்லர் படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களும் இந்நிகழ்ச்சியை காண திரண்டு வந்திருந்தனர்.

அப்போது பேசிய தனுஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் குறித்து புகழ்ந்து பேசியிருந்தார். “அருண் மாதேஸ்வரன பாக்குறப்போ எனக்கு வெற்றிமாறன் தான் நியாபத்தில் வருகிறார். அருணை முதல் தடவை பார்த்தப்போ, இந்த தம்பியா, சரி ஓகேன்னு தான் படத்தோட ஒன்லைன் கேட்டேன். ஒரு 15 நிமிஷம் சொன்னாரு, பெரிய ஸ்கேல் பட்ஜெட் படமா இருக்குதே, பண்ணிட முடியாமுன்னு கேட்டேன். எல்லாத்துக்கும் பண்ணிடலாம், பண்ணிடலாம்ன்னு சொன்னார்.”

“இப்ப நான் கேப்டன் மில்லர் படத்த முழுசா பாத்தேன்… அவரு சொன்ன மாதிரிதான் இருக்கு… அப்புறம் தான் இது சம்பவம் பண்ற கைனு தெரிஞ்சுது..” என பயங்கரமாக புகழ்ந்துள்ளார் தனுஷ். அதுமட்டும் இல்லாமல் விரைவில் மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் தனுஷ் கூறியது ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது. தனுஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணி மீண்டும் இணைவது பற்றி ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் காம்போவில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!!

More in Cinema News

To Top