Connect with us

தீபாவளி ரிலீசுக்கும் இப்படி தான்…படத்திற்கு தமிழக அரசு ஒதுக்கி உள்ள ஷோ விவரம்!

Cinema News

தீபாவளி ரிலீசுக்கும் இப்படி தான்…படத்திற்கு தமிழக அரசு ஒதுக்கி உள்ள ஷோ விவரம்!

இந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் மிக பெரிய நட்சத்திரங்களாக உள்ள ரஜினி, கமல்,தனுஷ், விஜய், அஜித், போன்ற நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை…அது ரசிகர்களுக்கு வருத்தம் தான்..

இப்படி இருக்கும் நிலையில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள ‘ஜப்பான்’ மற்றும் ராகவா லாரன்ஸ் – எஸ் ஜே சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மற்றும் விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரெய்டு ஆகிய படங்கள் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது…

இதை தொடர்ந்து காளி வெங்கட் நாயகனாக நடித்துள்ள ‘கிடா’ திரைப்படம் நவம்பர் 11-ஆம் தேதி வெளியாகிறது…இந்த படங்கள் தான் வருகின்றது…இருந்தாலும் ரசிகர்கள் இன்னும் பெரிய படங்களை எதிர்பார்க்கின்றனர்..

இந்த நான்கு படங்களுமே தனித்தனி கதைக்களத்தில் வரும் படங்களாக இந்த தீபாவளிக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்களும் இப்படங்களை பார்க்க ஆர்வமாக காத்திருக்கின்றனர்.அதேபோல் தளபதியின் ‘லியோ’ படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு பல திரையரங்குகளில் ஓடும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

தீபாவளிக்கு ரிலீசாக உள்ள படங்களின் முன்பதிவு துவங்கி வரும் நிலையில் வெளியாக உள்ள ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.இந்த இரண்டு படங்களுக்குமே, படம் வெளியாகும் நவம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை, காலை 9 மணி முதல் நள்ளிரவு 1:30 மணி வரை ஐந்து காட்சிகளுக்கு அனுமதி வழங்கி இருக்கின்றது அதனால் ஏர்லி மார்னிங் காட்சிகள் இல்லை என சொல்லப்பட்டு இருக்கின்றது இந்த படம் கண்டிப்பாக கொண்டாட்டம் சார்ந்ததாக இருக்கும் என சொல்லப்பட்டு வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top