Connect with us

டேவிஸ் கோப்பை டென்னிஸில் இத்தாலி சாம்பியன்.

Sports

டேவிஸ் கோப்பை டென்னிஸில் இத்தாலி சாம்பியன்.

போலோக்னா,
டேவிஸ் கோப்பை டென்னிஸின் பரபரப்பான இறுதி போட்டி இத்தாலியின் போலோக்னா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக இத்தாலி மற்றும் ஸ்பெயின் அணிகள் நேருக்கு நேர் மோதின.

முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இத்தாலியின் மேட்டியோ பெரேட்டினி அதிரடி வெற்றி பதிவு செய்து அணிக்கு முன்னிலை பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் பிளவியோ கோபோலி தன்னம்பிக்கை மிக்க ஆட்டத்தால் ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி மேலும் ஒரு வெற்றியை சேர்த்தார்.

இரண்டு தொடர்ச்சியான வெற்றிகளால் இத்தாலி 2–0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி, தொடர்ந்து மூன்றாவது முறையாக டேவிஸ் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த சாதனை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு: இந்திய முக்கிய வீரர்கள் பங்கேற்பில் சந்தேகம்

More in Sports

To Top