Connect with us

சாம்சனுக்குப் பதிலாக 2 முக்கிய ஆல்-ரவுண்டர்களை வழங்கும் சிஎஸ்கே — ரசிகர்கள் அதிர்ச்சி!

Sports

சாம்சனுக்குப் பதிலாக 2 முக்கிய ஆல்-ரவுண்டர்களை வழங்கும் சிஎஸ்கே — ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை,
வரவிருக்கும் 19வது ஐபிஎல் சீசனுக்கான வீரர் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து தற்போது அணிகள் இடையே டிரேடிங் (வர்த்தக பரிமாற்ற) பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.

கடந்த சீசனில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதால், அணியை வலுப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை தங்கள் அணியில் சேர்க்க சென்னை நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது.

சாம்சனும் ராஜஸ்தானை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், ராஜஸ்தான் அணி அவருக்கு பதிலாக சிஎஸ்கேவின் முன்னணி ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகியோரை தர வேண்டும் என கோரியுள்ளது. சிஎஸ்கே இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2012 முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா, 2023 இறுதிப் போட்டியில் குஜராத்துக்கு எதிராக கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சிஎஸ்கேவுக்கு சாம்பியன் பட்டத்தைத் தேடி தந்தார். கடந்த சீசனில் ரூ.18 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட அவரை இப்போது மாற்றும் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோல் சாம் கர்ரன், ரூ.2.4 கோடிக்கு ஏலத்தில் சிஎஸ்கேவால் எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிரேடிங் நடைமுறைக்கு இறுதி ஒப்புதல் கிடைத்தால், சாம்சனும் சிஎஸ்கே அணியும் இணையும் அபூர்வ கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நியூ சவுத் வேல்ஸ் ஓபன்: இறுதியில் தமிழக வீராங்கனை போராடி தோல்வி

More in Sports

To Top