Connect with us

சிஎஸ்கேவில் இணைந்தார் சஞ்சு சாம்சன் — அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Cinema News

சிஎஸ்கேவில் இணைந்தார் சஞ்சு சாம்சன் — அதிகாரப்பூர்வ அறிவிப்பு

19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக, அணிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

கடைந்த சீசனில் (18-வது சீசன்), ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், எதிர்பாராத வகையில் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் முடித்தது. இதுவே சென்னை அணி கடைசி இடத்தைப் பெறும் முதல் முறை.

இதன் பின், சிஎஸ்கே 6 வீரர்களை விடுவிக்கத் தீர்மானித்துள்ளது. டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர்.

இதற்கிடையில், சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க முயன்றது. பதிலுக்கு, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை தர வேண்டுமென ராஜஸ்தான் கேட்டது. சமீபத்தில் நடந்த ஒப்பந்தத்தின் மூலம், ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை மாற்றாக வழங்கி, ரூ.18 கோடிக்கு சஞ்சு சாம்சனை சென்னை அணி பெற்றுள்ளது.

ராஜஸ்தானுக்காக 11 சீசன்கள் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், இதுவரை 4,027 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் நிர்வாகம் இந்த பரிமாற்றத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புகழ்பெற்ற நேரு ஸ்டேடியம் இடிக்க தீர்மானம்!

More in Cinema News

To Top