Connect with us

ஜோட்டாவின் இறுதி ஊர்வலத்தில் ஏன் வரவில்லை? ரொனால்டோ பதில்!

Sports

ஜோட்டாவின் இறுதி ஊர்வலத்தில் ஏன் வரவில்லை? ரொனால்டோ பதில்!

லிஸ்பன்:
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் தியாகோ ஜோட்டா (28) கடந்த ஜூலை மாதம் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அதே விபத்தில் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவும் பலியானார். இந்த துயரமான சம்பவம் கால்பந்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஜோட்டாவின் இறுதி ஊர்வலத்தில், போர்ச்சுக்கலின் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்காதது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. “சக வீரர் ஒருவரின் இறுதி ஊர்வலத்திற்குக் கூட வரவில்லை” என பலர் ரொனால்டோவை குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, ரொனால்டோ அமைதியாக விளக்கம் அளித்தார்: “மக்கள் என்னை அடிக்கடி விமர்சிக்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. உங்கள் மனசாட்சி சுத்தமாக இருந்தால், மற்றவர்கள் சொல்வது பொருட்டல்ல. நான் ஜோட்டாவின் இறுதி ஊர்வலத்திற்கு செல்லாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன,” என அவர் கூறினார்.

அவர் மேலும் விளக்கினார்: “முதலில், என் தந்தை இறந்த பிறகு நான் இனி ஒருபோதும் கல்லறைக்கு செல்லக்கூடாது என்று என் மனதுக்குள் உறுதி செய்தேன். இரண்டாவதாக, நான் எங்கு சென்றாலும், மக்கள் முழு கவனத்தையும் என்னை நோக்கி திருப்புவார்கள். அந்த நேரத்தில் கவனம் ஜோட்டாவுக்கும் அவரது குடும்பத்திற்குமே செல்ல வேண்டும் என்று நினைத்தேன்,” என்று ரொனால்டோ தெரிவித்தார்.அவரின் இந்த பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பாராட்டைப் பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அக்டோபர் மாத சிறந்த வீரர் விருது – பரிந்துரைகள் பட்டியல் வெளியிட்டது ஐசிசி

More in Sports

To Top