Connect with us

ரெட்கார்டில் முதல் முறையாக வெளியேற்றப்பட்ட ரொனால்டோரெட்கார்டில்

Sports

ரெட்கார்டில் முதல் முறையாக வெளியேற்றப்பட்ட ரொனால்டோரெட்கார்டில்

டப்ளின்:
2026 பிபா உலகக் கோப்பைக்கான ஐரோப்பிய தகுதி சுற்றில், போர்ச்சுகல் அணி அயர்லாந்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அயர்லாந்தின் டிரோய் பரோட் 17 மற்றும் 45-வது நிமிடங்களில் இரு கோல்கள் அடித்து அணி வெற்றிக்கு காரணமானார்.

இந்நிலையில், இரண்டாம் பாதியில் பெரிய சர்ச்சை உருவானது. 61-வது நிமிடத்தில், போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அயர்லாந்து வீரர் டாரா ஒ’ஷியாவை முழங்கையால் தள்ளியதால், நடுவர் முதலில் மஞ்சள் அட்டையும், பிறகு VAR மூலம் அதை சிவப்பு அட்டையாக மாற்றியும் வெளியேற்றினார்.

40 வயதான ரொனால்டோ தனது 22 ஆண்டு சர்வதேச பயணத்தில் முதல்முறையாக ரெட்கார்டு பெற்றார். இதன் காரணமாக அர்மேனியாவுக்கு எதிரான அடுத்த தகுதி ஆட்டத்தில் அவர் விளையாட முடியாது.

மேலும், இந்த மோசமான நடத்தை குறித்து பிபா ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி வருகிறது. குறைந்தது 2 போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், போர்ச்சுகல் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றாலும், ரொனால்டோ தொடக்க ஆட்டங்களை தவறவிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தல் டெஸ்ட்: இந்திய அணியை அறிவித்த பார்த்தீவ் படேல் – 2 தமிழக வீரர்கள் சேர்ப்பு!

More in Sports

To Top