Connect with us

நடிகர் நிவின் பாலி மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் – போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!!

Cinema News

நடிகர் நிவின் பாலி மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் – போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!!

பிரபல நடிகர் நிவின் பாலி மீது பெண் அளித்த பாலியல் புகாரில் – நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மலையாள திரைத்துறையில் பாலியல் குற்றச்சாட்டுகள் பூதாகரமானதைத் தொடர்ந்து மலையாள திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் விலகினார்.

இதையடுத்து மலையாள திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் மீது பலர் பாலியல் புகார்கள் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் நிவின் பாலி மீதும் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த புகார் பொய்யானது என நிவின் பாலி தெரிவித்திருந்த நிலையில் தற்போது அது உண்மையாகி உள்ளது.

மலையாள நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகாரில், நம்பத்தகுந்த எந்த ஆதாரங்களும் இல்லை என நீதிமன்றத்தில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் இடத்தில் நிவின் பாலி இல்லை. அவரது பயண விபரங்கள், க்ரெடிட் கார்டு பரிவர்த்தனை உள்ளிட்ட விபரங்கள் திரட்டப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top