Connect with us

தளபதி 68 படத்தில் விஜய்யுடன் 16 வருடங்களுக்கு பின் இணையும் பிரபல காமெடி நடிகர்! யார் தெரியுமா?!

Cinema News

தளபதி 68 படத்தில் விஜய்யுடன் 16 வருடங்களுக்கு பின் இணையும் பிரபல காமெடி நடிகர்! யார் தெரியுமா?!

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் 16 வருடங்கள் கழித்து விஜய்யுடன் இணைந்துள்ள காமெடி நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

‘தளபதி 68’ படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் நடித்து வருகிறது என்பதும் விஜய், 19 வயது இளைஞர் உட்பட இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ‘தளபதி 68’ திரைப்படத்தில் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் விஜய் நடித்த ’சிவகாசி’ மற்றும் ’அழகிய தமிழ் மகன்’ ஆகிய படங்களில் கஞ்சா கருப்பு நடித்த நிலையில் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் அவர் இணைந்து நடிக்கவுள்ளார். கஞ்சா கருப்பு இந்த படத்தில் இணைந்துள்ள தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படம் யுவன்ஷங்கர் ராஜா இசையில், AGS நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்றும் இந்த படம் விஜய்யின் பிறந்த நாளின் போது திரையரங்கில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top