Connect with us

மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கோகோ காப் துவக்க வெற்றி!

Sports

மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கோகோ காப் துவக்க வெற்றி!

ரியாத்,
உலகின் முன்னணி 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது. ‘ஸ்டெபி கிராப்’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில், அமெரிக்காவின் 3-ம் நிலை வீராங்கனையான கோகோ காப், இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினியை 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தன்னுடைய முதலாவது வெற்றியை பதிவு செய்தார். இதேசமயம், பாவ்லினிக்கு இது தொடரின் 2-வது தோல்வியாகும்.

முன்னதாக ‘செரீனா’ பிரிவில், அமெரிக்க வீராங்கனைகளான அமன்டா அனிசிமோவா மற்றும் மேடிசன் கீஸ் மோதிய ஆட்டம் பரபரப்பாக நடந்தது. இதில் அனிசிமோவா 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தனது அரைஇறுதி நம்பிக்கையை உயிர்ப்பித்தார். இரண்டாவது தோல்வியை சந்தித்த மேடிசன் கீஸ், அடுத்த கட்டத்திற்கான வாய்ப்பை இழந்தார்.

இந்த பிரிவில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா ஏற்கனவே இரு வெற்றிகளுடன் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் அனிசிமோவா மற்றும் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் மோதவுள்ளனர். இதில் வெற்றி பெறும் வீராங்கனை, இரண்டாவது அரைஇறுதி இடத்தைப் பெறவுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வொரு போட்டியிலும் பதக்கம் கிடைப்பது சாத்தியமில்லை.” – மனு பாக்கர்

More in Sports

To Top