Connect with us

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் சென்னை அணி சாம்பியன்

Sports

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் சென்னை அணி சாம்பியன்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் கடந்த 2-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட 13 இடங்களில் தொடங்கியது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுப்பிரிவு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில், 38 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

38 மாவட்டங்கள் பங்கேற்ற போட்டியில் சென்னை அணி 109 தங்கம், 90 வெள்ளி, 82 வெண்கலம் என 281 பதக்கங்களை வென்று முழு சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. செங்கல்பட்டு மாவட்டம் (36 தங்கம், 22 வெள்ளி, 30 வெண்கலம்) இரண்டாம் இடத்தை, கோவை மாவட்டம் (33 தங்கம், 27 வெள்ளி, 35 வெண்கலம்) மூன்றாம் இடத்தை பிடித்தன.

போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து, முதல் 3 இடங்களை பிடித்த சென்னை, செங்கல்பட்டு, கோவை அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். மேலும், விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டை வழங்கினார். அதேசமயம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை திட்டத்தின் கீழ் வீரர்களுக்கு நி

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஐசிசி ரேட்டிங்கில் குல்தீப் யாதவ் முன்னேற்றம்

More in Sports

To Top