Connect with us

இதென்னப்பா மன்னர் வகையறாவுக்கு வந்த சோதனை – நடிகர் விமலுக்கு செக் வைத்த சென்னை நீதிமன்றம்..!!

Cinema News

இதென்னப்பா மன்னர் வகையறாவுக்கு வந்த சோதனை – நடிகர் விமலுக்கு செக் வைத்த சென்னை நீதிமன்றம்..!!

திரைப்படங்களில் மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விமலுக்கு செக் வைக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது .

தமிழ் சினிமாவில் இருக்கும் பல துடிப்பான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விமல். சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன சின்ன காதாபாத்திரங்களில் நடித்து பின்னர் படி படியாக முன்னேறி இன்று கலக்கல் கதாநாயகனாக விமல் வலம் வருகிறார்.

எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருக்க திடிரென நடிகர் விமல் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் காணாமல் போய்விட்ட நிலையில் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விமல் நல்ல பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விமலுக்கு செக் வைக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது .

‘மன்னர் வகையறா’ படத்தை தயாரிப்பதற்காக பெற்ற 3.6 கோடியை, 18% வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என நடிகர் விமலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனது A3V தயாரிப்பு நிறுவனம் மூலம் தான் தயாரித்த ‘மன்னர் வகையறா’ படத்துக்காக கோபி என்பவரிடம் 5 கோடி கடன் வாங்கியுள்ளார். இதில் 3.6 கோடியை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்தபோதும், பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆக்சன் கில்லர் ஆக அவதாரம் எடுக்கும் தனுஷ், D54 படத்தின் அப்டேட்

More in Cinema News

To Top