Connect with us

சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!!

Uncategorized

சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!!

கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் வடபழனி, கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், போரூர், ராமாபுரம், நந்தம்பாக்கம், கிண்டி,அம்பத்தூர், பாடி, கள்ளிகுப்பம், திருமுல்லைவாயில், அயப்பாக்கம், ஆவடி, பட்டாபிராம், பருத்திப்பட்டு, பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவேற்காடு, வேலப்பன்சாவடி, வானகரம், மதுரவாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது . இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மேடு, பள்ளம் அறியாது தட்டுத் தடுமாறி செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாளும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Rowdy Janardhan Buzz 🚀 Vijay Deverakondaக்கு எதிரி Vijay Sethupathi!

More in Uncategorized

To Top