Connect with us

“Captain Miller படத்தின் Third Single பாடல் வெளியானது! Viral!”

Cinema News

“Captain Miller படத்தின் Third Single பாடல் வெளியானது! Viral!”

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதையும் பார்த்தோம்.

சென்சாரில் ‘U/A’ சான்றிதழ் பெற்றுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தநிலையில் இந்த படத்தின் பிரம்மாண்டமான புரமோஷன் நிகழ்ச்சி நாளை சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நாளைய விழாவில் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷின் பேச்சைக் கேட்க ஆயிரம் கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  15 ஆண்டுகள் தொலைக்காட்சி பயணத்தை கொண்டாடிய மணிமேகலை – ஜீ தமிழில் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!

More in Cinema News

To Top