Connect with us

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – மீண்டும் வருகிறார் விஜய் சேதுபதி!

Bigboss Season 9

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – மீண்டும் வருகிறார் விஜய் சேதுபதி!

விஜய் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ் தனது சீசன் 9-இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னதாக எட்டாவது சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி, வரவிருக்கும் ஒன்பதாவது சீசனையும் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சீசன் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு சீசனிலும் புதிய பரிமாணங்களையும் புதுமைகளையும் கொண்டு வந்த பிக் பாஸ், இந்த முறை எந்த வித மாற்றங்களை ரசிகர்களுக்கு வழங்கப்போகிறது என்ற ஆர்வம் அனைவரிடமும் நிலவி வருகிறது.

போட்டியாளர்கள் பட்டியல், வீட்டு அமைப்பு மற்றும் புதிய டாஸ்குகள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. கடந்த சீசன்களில் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை கிளப்பிய பிக் பாஸ், இம்முறை எந்த அளவுக்கு தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தப்போகிறது என்பதை காத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9, விரைவில் ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார்-இல் ஒளிபரப்பாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Season 9

To Top