Connect with us

பன்முகம் கொண்ட போட்டியாளர்களுடன் இனிதே தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 8 – யாரெல்லாம் வந்துருக்காங்க தெரியுமா..?

Cinema News

பன்முகம் கொண்ட போட்டியாளர்களுடன் இனிதே தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 8 – யாரெல்லாம் வந்துருக்காங்க தெரியுமா..?

பன்முகம் கொண்ட போட்டியாளர்களுடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இனிதே தொடங்கியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியே பிக் பாஸ் .

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் அமோக வரவேற்பை பெற்று இன்று வரை அனைவரும் ரசிக்கும் நிகழ்ச்சியாகி வலம் வருகிறது .

கடந்த சீசன்களை போல் பிக் பாஸ் 8 ஆவது சீசனிலும் என்னெல்லாம் நடக்க போகிறது என்பதை காண அனைவரும் காத்திருந்த நிலையில் 8 ஆவது சீசனில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து இந்நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இந்த சீசன் இனிதே தொடங்கி உள்ளது .

கடந்த சீசனை போல் இந்த சீசனிலும் 18 போட்டியாளர்கள் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது வரை 8 போட்டியாளர்கள் வந்துள்ளனர்.

அதன்படி பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் , தர்ஷா குப்தா , தீபக் , சுனிதா, ஆர்.ஜே.நந்தினி, ஜெபிரி,சத்யா ,சாசன உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர் . இதையடுத்து இன்னும் இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “‘டியூட்’ படம்: Oorum Blood பாடல் நூறு மில்லியன் சாதனை!”

More in Cinema News

To Top