Connect with us

படுக்கையறை காட்சி குறித்து ஆழமாக பேசிய பிக் பாஸ் பூர்ணிமா..!!

Cinema News

படுக்கையறை காட்சி குறித்து ஆழமாக பேசிய பிக் பாஸ் பூர்ணிமா..!!

பிக் சீசன் 7 நிகழ்ச்சியில் 16 லட்சம் கொண்ட பணப்பெட்டியை நைசாக தூக்கிச்சென்ற பிக் பாஸ் புகழ் பூர்ணிமா தற்போது சினிமாவில் படுக்கையறை காட்சி குறித்து ஆழமாக பேசியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க கோலாகலமாக நடைபெற்று முடிந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 16 லட்சம் கொண்ட பணப்பெட்டியை நைசாக தூக்கி சென்றவர் தான் பூர்ணிமா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே யூடியூபில் செம பேமஸ் ஆக இருந்த அவர் சினிமாவிலும் நடித்திருந்தார் நிகழ்ச்சிக்கு முன்பாகவே பூர்ணிமா நடித்த அன்னபூரணி திரைப்படம் வெளியானது. இதையடுத்து, அவர் நாயகியாக நடித்த செவப்பி என்ற படமும் வௌியானது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை பூர்ணிமா ரவி, படுக்கையறை காட்சி குறித்து பேசியுள்ளார் .

“படுக்கையறை காட்சி என்று இல்லை, எந்த காட்சியாக இருந்தாலும் அது கதையுடன் ஒத்துப்போக வேண்டும். அப்படியில்லாமல் திணிக்கப்பட்ட கூடாது.

முக்கியமாக ரொமான்ஸ் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்” என படுக்கையறை காட்சி குறித்த தனது கருத்தை நடிகை பூர்ணிமா ஆழமாக கூறியுள்ளார் .

இதேபோல் “தனுஷ் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். எந்த வித கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு எந்த எல்லைக்கும் அவர் செல்வார்” என கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top