Connect with us

IND v ENG: முதல் இரண்டு Test போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு! இளம் வீரருக்கு வாய்ப்பு!

Sports

IND v ENG: முதல் இரண்டு Test போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு! இளம் வீரருக்கு வாய்ப்பு!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கடந்த 2021-ல் இங்கிலாந்து அணி இந்தியா வந்து விளையாடிய போது டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்திருந்தது. அதன்பிறகு அந்த அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பாணி முற்றிலும் மாற்றம் கண்டது.

பாஸ்பால் அணுகுமுறை மூலம் அந்த அணி அதகளம் செய்து வருகிறது. இந்த சூழலில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

இஷான் கிஷன், ஷமி போன்ற வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சுழற்பந்து வீச்சை அதிகம் நம்பி களம் காண உள்ளது. அஸ்வின், ஜடேஜா, அக்சர் மற்றும் குல்தீப் என நான்கு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் அங்கம் வகிக்கின்றனர்.

அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), ஷூப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “கணவன் போல் பிள்ளை…” – ஜாய் கிரிஸில்டாவின் மனதை உருக்கும் பதிவு!

More in Sports

To Top