Connect with us

Dupe போடாமல் கடிகாரத்தில் ஏறிய நடிகர் விஜயகாந்த்! AVM தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!

Cinema News

Dupe போடாமல் கடிகாரத்தில் ஏறிய நடிகர் விஜயகாந்த்! AVM தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!

தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று காலை(டிசம்பர் 28) காலமானார். சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமைக் கழகம் மற்றும் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின், சுமார் 2:45 மணியளவில், விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

அப்போது வழிநெடுக நின்று இருந்த விஜயகாந்தின் ஆதரவாளர்கள் கேப்டன்.. கேப்டன் என ஆர்ப்பரித்து தங்களது இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் அருணா குகன் அனுப்பிய தகவலை மீண்டும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விஜயகாந்தை நினைவுகூர்ந்தார்.

தயாரிப்பாளர் அருணா குகன் விஜயகாந்த் பற்றி எக்ஸ் தளத்தில் பதிந்ததாவது, ‘’விஜயகாந்த் சார் தனது விதிவிலக்கான ஸ்டன்ட்களுக்கு பெயர் பெற்றவர். அவர் தனது பட சண்டைக்காட்சிகளில் தானே செயல்பட்டார். சண்டைக் காட்சிகளில் கால்களை 360° சுழற்றும் தனித் திறமை அவருக்கு இருந்தது.

சேதுபதி ஐ.பி.எஸ். படத்தில் அவர் செய்த ரிஸ்க் ஆன ஆக்ஷன் சீக்வென்ஸ் இது. விஜயகாந்த் எப்படி ஒரு காரின் மீது சண்டையிட்டு மற்றொரு காரின் பானட்டில் குதிக்கிறார் என்பதைக் கருத்தில் கொண்டால், அவை சகாப்தத்தின் சிறந்த அதிரடி காட்சிகளில் ஒன்றாகும்.

சேதுபதி ஐபிஎஸ் படத்தில் ஒரு கடிகார கோபுர காட்சி இடம்பெற்றது. அதில் நடிகர் விஜயகாந்த் டூப் போடாமல் இழுத்தார்’’ எனத் தெரிவித்தார். இந்தப் பதிவு வைரல் ஆனது. அதனை திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அதனைத் தொடர்ந்து அந்தப் பதிவு மீண்டும் வைரல் ஆகியது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வழக்கம்போல் அசத்திய மாணவிகள் - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..!!

More in Cinema News

To Top