Connect with us

பகத் பாசிலின் ‘ஆவேசம்’ திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Cinema News

பகத் பாசிலின் ‘ஆவேசம்’ திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

பகத் பாசில் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான ஆவேசம் திரைப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது .

நடப்பாண்டில் மலையாளத்தில் வெளியான பிரேமலு, Bramayugam, மஞ்சுமெல் பாய்ஸ் போன்ற திரைப்படங்கள் மலையாளம் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படங்களாக உருவெடுத்துள்ளது .

அந்தவகையில் தற்போது பகத் பாசில் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ஆவேசம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் உருவான இப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் தற்போது ரசிகர்களின் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது.

மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை இளம் வயதினர் அதிகம் கொண்டாடி வருவதாக தகவல் பரவிய நிலையில் தற்போது ஒரு சிறப்பான தரமான தகவல் வெளியாகி உள்ளது .

இப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது .

அதன்படி உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ள இப்படம் வரும் மே 9ம் தேதி Amazon Prime OTT-ல் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘ப்ரோ கோட்’ தலைப்பு வழக்கு: கோர்ட் அதிரடி உத்தரவு

More in Cinema News

To Top