Connect with us

“வீட்டிற்குள் புகுந்த மழைநீர் வடியாமல் அவதிப்படும் அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியன்! Viral Pics!”

Cinema News

“வீட்டிற்குள் புகுந்த மழைநீர் வடியாமல் அவதிப்படும் அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியன்! Viral Pics!”

சாமானிய மக்கள் மட்டுமின்றி பிரபலங்களையும் இந்த மிக்ஜாம் புயல் விட்டு வைக்கவில்லை. அப்பார்ட்மென்ட் வீடுகளில் செம Safe ஆக இருக்கிறோம் என நினைத்துக் கொண்டிருந்த பலரும் சென்னையில் 38 மணி நேரத்துக்கு மேல் கொட்டித் தீர்த்த மழை காரணமாக சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது.

பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் வடிந்தாலும், தெருவுக்குள் பல வீடுகளுக்குள் தண்ணீர் இன்னமும் வடியாமல் தேங்கி இருப்பது பலரையும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது.

நடிகர் அசோக் செல்வனை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட நடிகை கீர்த்தி பாண்டியன் மயிலாப்பூரில் வசித்து வரும் நிலையில், திடீரென கொட்டித் தீர்த்த பேய் மழை காரணமாக அவரது அப்பார்ட்மென்ட் இருக்கும் விவேகானந்தா கல்லூர் இருக்கும் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியில் கடந்த 48 மணி நேரமாக கரன்ட் இல்லை என்றும் தண்ணீர் கிரவுண்ட் லெவல் வரை தேங்கியிருப்பதாகவும், யாரும் வெளியே செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

ஒருத்தர் கூட காப்பாற்ற வரவில்லை எனக் கூறியுள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் ரொம்பவே கஷ்டப்படுகின்றனர். தண்ணீர் கூட கிடைக்காமல் பலரும் தவித்து வருகின்றனர். நெட்வொர்க்கும் கிடைக்கவில்லை. மாடியில் ஏதாவது மூலையில் கிடைக்கும் கொஞ்சம் சிக்னலை வைத்துத் தான் ட்வீட் போடுகிறேன். சென்னை மாநகராட்சி நிர்வாகிகள் தயவு செய்து இந்த இடத்தின் பிரச்சனை சரி செய்ய வேண்டும் என கீர்த்தி பாண்டியன் ட்வீட் போட்டுள்ளார்.

See also  ஃபெங்கல் புயலால் ஒத்தி வைக்கிறோம் - 'மிஸ் யூ' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top