Connect with us

ஆஷஸ் முதல் டெஸ்ட் நாளை ஆரம்பம்

Sports

ஆஷஸ் முதல் டெஸ்ட் நாளை ஆரம்பம்

பெர்த்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட பாரம்பரிய ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. நூற்றாண்டுக்கு மேலாக நடைபெறும் இந்த தொடருக்கு தனி வரலாறும், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகமும் இருக்கும்.

ஆஷஸ் கோப்பைக்கான போட்டியில் ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் எப்போதும் தீவிரமாக மோதுகின்றன. இதுவரை ஆஸ்திரேலியா 34 முறையும், இங்கிலாந்து 32 முறையும் தொடரை வென்றுள்ளன. 7 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளன. சமீபத்திய 2023 ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

தற்போதைய ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் பெர்த்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு போட்டி தொடங்கும்; ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரலையாக ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அதிரடி வெற்றி

More in Sports

To Top