Connect with us

சென்னையை நடுநடுங்க வைத்த ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் – தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஐய் கோரிக்கை..!!

Cinema News

சென்னையை நடுநடுங்க வைத்த ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் – தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஐய் கோரிக்கை..!!

தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை சம்பவம் சென்னையை நடுநடுங்க வைத்துள்ள நிலையில் சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கோரிக்கை வைத்துள்ளார் .

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top