Connect with us

அடுத்த ஆண்டு கேரளாவில் களமிறங்க உள்ள அர்ஜென்டினா கால்பந்து அணி

Sports

அடுத்த ஆண்டு கேரளாவில் களமிறங்க உள்ள அர்ஜென்டினா கால்பந்து அணி

புதுடெல்லி:
உலக சாம்பியனான லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி இந்த மாதம் கேரளா வருவதாக முன்பு அறிவிக்கப்பட்டது. அப்போது, அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி வரும் 17ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகளும் நடந்தன.

ஆனால், எதிர்பாராத விதமாக அர்ஜென்டினா அணியின் கேரளா வருகை திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதை அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனமும், போட்டியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனமும் உறுதிப்படுத்தின.

அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “சர்வதேச கால்பந்து சங்கமான பிபா (FIFA) இதற்கான அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா நட்புறவு ஆட்டத்தை நவம்பரில் நடத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தது.

இந்நிலையில், மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கேரளா வரவுள்ளதாக கேரள மாநில விளையாட்டு அமைச்சர் வி. அப்துர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

கேரள அரசின் ‘ஸ்போர்ட்ஸ் விஷன் 2031’ நிகழ்வில் பேசிய அவர், “இரண்டு நாட்களுக்கு முன்பு அர்ஜென்டினா அணியிடமிருந்து மார்ச் மாதம் வருவதை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் கிடைத்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். அணியின் வருகைக்கான அனைத்து ஆயத்தங்களும் முடிக்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ₹25.20 கோடி கேமரூன் கிரீன்! IPL வரலாற்றில் புதிய சாதனை

More in Sports

To Top