Connect with us

அனுபமா பரமேஷ்வரன் நடிக்கும் ‘லாக்டவுன்’.. விஜய் சேதுபதி வெளியிட்ட டிரெய்லர்

Cinema News

அனுபமா பரமேஷ்வரன் நடிக்கும் ‘லாக்டவுன்’.. விஜய் சேதுபதி வெளியிட்ட டிரெய்லர்

நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லாக்டவுன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளை சென்றடைய உள்ளது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கும் இந்த படத்திற்கு ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்கள். சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கொரோனா காலத்தில் இடம்பெற்ற உண்மை சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகியதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், படம் வரும் மாதம் 5ஆம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில், ‘லாக்டவுன்’ படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். டிரெய்லரில், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அதனைத் தொடர்ந்து அமலுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு, அந்த சூழ்நிலையில் அவள் சந்திக்கும் உண்மையான பிரச்சனை மற்றும் அதிலிருந்து எப்படி விடுபடுகிறாள் என்பவை சுருக்கமாக காட்டப்படுகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ரஜினிகாந்த் வெளியிட்ட டீசர்! அபிஷன் ஜீவிந்த் அறிமுக படம் ‘With Love’🔥”

More in Cinema News

To Top