Connect with us

துல்கர் சல்மானை தொடர்ந்து தக் லைஃப் படத்தில் இருந்து விலகிய இன்னொரு பிரபலம் – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Cinema News

துல்கர் சல்மானை தொடர்ந்து தக் லைஃப் படத்தில் இருந்து விலகிய இன்னொரு பிரபலம் – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

மணிரத்தினம் – கமல்ஹாசன் காம்போவில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் துல்கர் சல்மான் விலகிய நிலையில் தற்போது இந்த மாஸ் பட்ஜெட் படத்தில் இருந்து மற்றொரு பிரபலம் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பல மெகா கூட்டணியில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன் . அந்தவகையில் தற்போது தனது 234வது படத்திற்காக இயக்குநர் மணிரத்னம் உடன் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்

தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையிகள் தற்போது இப்படம் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

பிரம்மாண்ட பொருட் செலவில் மெகா கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்திலிருந்து நடிகர் துல்கர் சல்மான் கடந்த சில நாட்களுக்கு முன் விலகி உள்ள நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து மற்றொரு பிரபலம் விலகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தேதி ஒதுக்குவதில் இருக்கும் பிரச்சனை காரணமாக நடிகர் ஜெயம் ரவி இப்படத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மனசாட்சி இருந்தால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற செய்தியை வெளியிட்டிருக்க மாட்டார் - வானதி சீனிவாசன் கண்டிப்பு..!!

More in Cinema News

To Top