Connect with us

திமுக செய்வது சரி கிடையாது விவசாயிகள் மீது குண்டர் சட்டம் மிக பெரிய கொடுமை!

Politics

திமுக செய்வது சரி கிடையாது விவசாயிகள் மீது குண்டர் சட்டம் மிக பெரிய கொடுமை!

குண்டர் சட்டம் ரத்து குறித்து அண்ணாமலை தன்னுடைய கருத்தை சொல்லி இருக்கின்றார் திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதை எதிர்த்து அமைதியான முறையில் போராடிய விவசாயிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தவறான முடிவை எடுத்து தமிழக அரசு,

திமுக அரசு விவசாயப் பெருமக்கள் பொதுமக்கள் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சி ஆகியோரின் தொடர் எதிர்ப்பை அடுத்து குண்டர் சட்டத்தை விலக்கிக் கொண்டது திமுகவினர் எடுத்த முயற்சிக்கு நான் வரவேற்பு கொடுக்கின்றேன்.

குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 6 பேரை மட்டும் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எதற்காக குண்டர் சட்டம் போடப்பட்டது என்பதற்கான காரணங்கள் என்னை பெரிதும் அசந்து பார்க்க வைத்து இருக்கின்றது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 43ஐ ஒருமுறை படித்துவிட்டு அதன்படி நடந்துக் கொள்ள வேண்டுமே தவிர விவசாயிகளை குறை சொல்லக் கூடாது…

அவர்களை குறை சொல்வதற்காக உங்கள் ஆட்சியை கொடுக்கவில்லை,நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிக்கும்போது நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எட்டுவதை விட்டுவிட்டு குண்டர் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது தவறான ஒன்று அது சரியான ஒரு விஷயமே கிடையாது…

தமிழகம் முழுவதும் ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களைப் பயன்படுத்தாமல் பல ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பிக் கொடுத்து வரும் திமுக அரசு மீண்டும் இதனை போல செய்து மக்களை கஷ்ட்ட படுத்தாதீர்கள்..அவர்கள் என்ன தீங்கு செய்து இருக்கின்றனர்..ஏன் இப்படி என விமர்சனம் செய்து இருக்கின்றார் அண்ணாமலை அவர்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Politics

To Top