Connect with us

விறுவிறுப்பாகும் ‘அமரன்’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!!

Cinema News

விறுவிறுப்பாகும் ‘அமரன்’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அமரன் திரைப்படம் வெளியாக இன்னும் வெகு சில நாட்களே உள்ள நிலையில் தற்போது இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படமே அமரன்.

சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார் .

காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் வீரமரணமடைந்த சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் மிடுக்கான ராணுவ வீரராக நம்ப எஸ்.கே நடித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி அமரன் படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படத்தின் டப்பிங் பணிகள் முழுமையாக நடைபெற்று முடிந்துள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top