Connect with us

வெளிநாட்டு லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை பங்கேற்க அனுமதி தர வேண்டும்” – ரவி சாஸ்திரி

Sports

வெளிநாட்டு லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை பங்கேற்க அனுமதி தர வேண்டும்” – ரவி சாஸ்திரி

சிட்னி:
ஐ.பி.எல். போன்ற வெளிநாட்டு டி20 லீக் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. அவர்கள் ஓய்வு பெற்ற பின்னரே அத்தகைய போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். இதனை எதிர்கொண்டு, இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிநாட்டு லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு. அங்கு அனைவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்காது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடாத பெரும்பாலான வீரர்கள், பெரும்பாலும் சி அல்லது 9 கிரேடு ஒப்பந்தத்தில் மட்டுமே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வீரர்களை பிக்பாஷ் (ஆஸ்திரேலியா) போன்ற வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடத் தடுத்தால், அவர்களது கிரிக்கெட் வளர்ச்சி பாதிக்கப்படும். ஐ.பி.எல் போன்ற போட்டிகள் இளம் வீரர்களுக்கு உயர்தர வீரர்களுடன் இணைந்து விளையாட வாய்ப்பு அளிக்கும் போல், வெளிநாட்டு லீக் அனுபவமும் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆதரவாக இருக்கும்.

அவர் மேலும் கூறியதாவது, வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடுவது அழுத்தத்தை கையாளவும், வெவ்வேறு உயர்தர வீரர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் உதவும். ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் பிளமிங் போன்ற முன்னணி வீரர்களிடம் இருந்து பல புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இது அவர்களுக்கு நல்ல பாடமாகவும், கிரிக்கெட்டின் அடிப்படை அறிவையும் கலாச்சார அனுபவத்தையும் வளர்க்கும் வாய்ப்பாகவும் இருக்கும். வெளிநாட்டு தொடரில் விளையாடுவதைவிட சிறந்த கல்வி எதுவும் இல்லை என அவர் வலியுறுத்தினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சல்மான் அலியின் பதவி பறிப்பு: பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன் யார்? – வெளியான தகவல்

More in Sports

To Top