Connect with us

“விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் திரண்ட ரசிகர்கள்! வைரலாகிவரும் வீடியோ!”

Cinema News

“விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் திரண்ட ரசிகர்கள்! வைரலாகிவரும் வீடியோ!”

துணிவு படத்தைத் தொடர்ந்து விடாமுயற்சி ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் அஜித். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை, மகிழ் திருமேனி இயக்குகிறார். விடாமுயற்சி படம் மூலம் அஜித் – மகிழ் திருமேனி கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

AK 62 படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. தற்போது அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி இணைந்ததால், ஷூட்டிங் தொடங்குவதில் தாமதமானது. அதனால் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மகிழ் திருமேனி. அதன்படி முதல் ஷெட்யூலை தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பும் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது ஷெட்யூல் மொத்தம் 70 நாட்கள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித், த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் இந்த ஷெட்யூலில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், அஜர்பைஜானில் உள்ள அஜித்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட் சென்று வருகின்றார்களாம். வார விடுமுறை நாட்களில் பக்கத்து நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் அஜர்பைஜான் செல்வதாக சொல்லப்படுகிறது.

தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்ட பின்னரும் தன்னைத் தேடி ரசிகர்கள் வருவது அஜித்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தன்னை சந்திக்க வரும் ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கிறாராம். இந்நிலையில், தற்போது விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தை பார்க்க சில ரசிகர்கள் சென்றுள்ளனர். அவர்கள் அஜித்தை சுற்றி வளைத்து பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

அப்போது அஜித் அவர்களை “ப்ளீஸ் உக்காருங்க” என அருகில் இருந்த சோபாவில் உட்கார வைத்து பேசியுள்ளார். ரசிகர்கள் மீது கோபம் கொள்ளாமல் அவர்களை கூலாக டீல் செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து அவரை பற்றி பாசிட்டிவாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். பொது நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்தாலும், அஜித்தை ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 “மீண்டும் நம்பிக்கை கண்டேன்…” – சமந்தாவின் மனம் திறந்த நெகிழ்ச்சியான பேட்டி!

More in Cinema News

To Top