Connect with us

கரூர் கூட்ட நெரிசல் குறித்து பேசிய அஜித், எச்சரித்த AK

Cinema News

கரூர் கூட்ட நெரிசல் குறித்து பேசிய அஜித், எச்சரித்த AK

Ajith: கரூர் நகரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரசிகர்கள் பெரும் அளவில் திரண்டு கலந்துகொண்ட நிகழ்வில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நெரிசலில் பலர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து திரையுலகத்திலும், சமூக வலைதளங்களிலும் பல்வேறு கருத்துகள் வெளிவந்தன.

இந்த நிலையில், நடிகர் அஜித் தனது அமைதியான தன்மையை மீறி, முதல் முறையாக இந்த சம்பவம் குறித்து திறந்த மனதுடன் பேசியுள்ளார். அவரின் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

அஜித் கூறியதாவது:

“கரூர் கூட்ட நெரிசலை வைத்து தமிழ்நாட்டில் பல விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால், அந்த சம்பவத்திற்காக ஒரே நபரை மட்டுமே குற்றம் சாட்டுவது சரி அல்ல. அந்த துயரத்திற்கு நாம் எல்லோருமே பொறுப்பு. நமக்காக கூட்டத்தை உருவாக்குவதில் வெறி கொண்ட சமூகமாக நாம் மாறிவிட்டோம். நமது ரசிகர்கள் எவ்வளவு பேர், எவ்வளவு ஆரவாரம் என காட்டிக்கொள்வதற்காக, உயிர்களையே பணயம் வைப்பது ஒரு கலாச்சாரமாகிவிட்டது. இது நிச்சயம் முடிவுக்கு வர வேண்டும்.”

அவர் மேலும் கூறியதாவது:

“கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஆனால் அங்கே இதுபோன்ற விபத்துகள் நடக்காது. ஏன் இந்த துயரம் தியேட்டர் வெளியே மட்டும் நடக்கிறது? ஏன் இது சினிமா பிரபலங்களுக்கே நேரிடுகிறது? இதனால் முழு சினிமா துறையும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.”

அஜித் மேலும் ரசிகர்களை நோக்கி கூறினார்:

“ரசிகர்களின் அளவுக்கு மீறிய அன்பு இதுபோன்ற நிகழ்வுகளை உருவாக்குகிறது. அன்பு வையுங்கள், ஆனால் அதைக் காட்டுவதற்காக உயிர் ஆபத்துக்குள்ளாக வேண்டாம். உங்கள் அன்பைக் காட்டுவதற்கு பல நல்ல வழிகள் இருக்கின்றன — சமூக சேவைகள், கல்வி உதவிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை. அது தான் உண்மையான ரசிக அன்பு.”

அவரின் பேச்சில் ஊடகங்களும் குறித்தார்:

“மீடியாவும் இதில் ஒரு பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு படத்தின் முதல் நாள், முதல் ஷோவிலும் ரசிகர்கள் செய்த செய்கைகளை பெரிதாகச் செய்தியாக்குகிறார்கள். இது ரசிகர்களின் மனநிலையை மாற்றி, அவர்களை தள்ளுகிறது. அதற்குப் பதிலாக நிதானத்தையும் பொறுப்பையும் ஊக்குவிக்க வேண்டும்.”

“என் மீது ரசிகர்கள் பொழியும் அன்புக்காக நான் எப்போதும் நன்றியுடன் இருக்கிறேன். ஆனால் அந்த அன்பே சில சமயம் எனது தனியுரிமையை இழக்க வைக்கிறது. என் மகனை பள்ளிக்கு அனுப்பவோ, என் குடும்பத்துடன் அமைதியாக வெளியே செல்வதற்கோ கூட முடியாத நிலை ஏற்படுகிறது. இது எனக்கு வலி தருகிறது. அந்த அன்பு கட்டுப்பாடோடு, பொறுப்போடு இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.”

See also  தனுஷின் 54வது படம், ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட வைரல் அப்டேட்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top