Connect with us

“அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன் நடிக்கும் ‘ஷைத்தான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!”

Cinema News

“அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன் நடிக்கும் ‘ஷைத்தான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!”

தமிழில் தனக்கேற்ற கதாபாத்திரங்கள் வருவதில்லை என கூறிய ஜோதிகா, மற்ற மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ படம் பாராட்டுகளைப் பெற்றது.

இதையடுத்து அவரது நடிப்பில் அடுத்ததாக ‘ஷைத்தான்’ என்ற பாலிவுட் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை ‘சூப்பர் 30’, ‘கானாபத்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இயக்கியுள்ளார்.

இதில் அஜய் தேவ்கன், மாதவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை அஜய் தேவ்கன் தயாரித்துள்ளார்.

த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அஜய் தேவ்கன் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வாடிவாசலில் சூர்யாவுக்கு வில்லனாகும் இயக்குநர் அமீர் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

More in Cinema News

To Top