Connect with us

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவராக ஐசரி கணேஷ் மீண்டும் நியமனம்

Sports

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவராக ஐசரி கணேஷ் மீண்டும் நியமனம்

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் (2025–2029) தேர்வுகளை ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி நடத்தியார் மற்றும் அதன் முடிவுகளை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் பார்வையாளர்களாக இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் தருண் ககானி, தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வெங்கடேஷ், மற்றும் தேர்தல் கமிட்டி உறுப்பினராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ரவீந்திர போஸ் செயல்பட்டனர்.

முக்கிய பொறுப்புகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த அனைவரும் போட்டியின்றி தேர்வானதால், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மற்ற முக்கிய பதவிகள் பின்வருமாறு:

  • சேர்மன்: சீதாராமராவ்
  • துணைத்தலைவர்கள்: சோலை ராஜா, செந்தில் தியாகராஜன், ராமசுப்பிரமணி, பாலாஜி மரதபா, ராஜ் சத்யன், சைப்ரஸ் போஞ்சா
  • பொதுச் செயலாளர்: ஆதவ் அர்ஜூனா
  • இணைச் செயலாளர்கள்: தமிழ் செல்வன், சந்திரசேகரன்
  • பொருளாளர்: லதா
  • நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள்: ஹிதேன் ஜோஷி, சபியுல்லா, செல்வமணி, சஞ்சய் ஜெயராஜ், நெல்சன் சாமுவேல், ஜான்சன், அருணாசலம், மெய்யப்பன், லோகநாதன்

இதன் மூலம் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் புதிய நிர்வாகத்துடன் 2025–2029 ஆண்டுகளுக்கான செயல்பாடுகளை துவங்கியது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான தகுதி – ஐக்கிய அரபு அமீரக அணி சாதனை!

More in Sports

To Top