Connect with us

கேப்டன் விஜயகாந்திற்கு பிறகு விஜய்தான் – விஷால் அதிரடி..!!

Cinema News

கேப்டன் விஜயகாந்திற்கு பிறகு விஜய்தான் – விஷால் அதிரடி..!!

கேப்டன் விஜயகாந்த் அண்ணனுக்கு பிறகு மக்கள் எதிர்பார்ப்போடு ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அது விஜய்தான் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது :

விஜய்யின் மாநாடு ஏற்பாடுகளை பார்க்கும் போது ரொம்ப ஆடம்பரமாக நடப்பதாக தெரிகிறது. விஜயகாந்த் அண்ணனுக்கு பிறகு மக்கள் எதிர்பார்ப்போடு ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அது விஜய்தான். சினிமாவை விட்டு அரசியலுக்கு வருவது சாதாரண விஷயம் கிடையாது.

கோடிக்கணக்கில் வியாபாரம் இருக்கும் ஒரு நடிகர் அதை விட்டுவிட்டு மக்களுக்கு பணி செய்ய வருவது வரவேற்கத்தக்கது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மாநாட்டில் அவர் என்ன பேசப் போகிறார் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

விஜய்க்கு கடவுள் அருள் உண்டு. அது ஜீசசாக இருந்தாலும் சரி, அல்லாவாக இருந்தாலும் சரி, அம்மனாக இருந்தாலும் சரி அவருக்கு அந்த ஆசீர்வாதம் இருக்கும். அவருக்கு மட்டுமில்லை எல்லாருக்குமே உண்டு என விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜன நாயகன்: ஃபர்ஸ்ட் சிங்கிள் மட்டும் அல்ல, ஆடியோ வெளியீடும் ரத்தானதா?

More in Cinema News

To Top