Connect with us

பல கோடி மதிப்பிலான சொகுசு வீடு வாங்கிய நடிகை த்ரிஷா – இத்தனை கோடி விலையா..?

Cinema News

பல கோடி மதிப்பிலான சொகுசு வீடு வாங்கிய நடிகை த்ரிஷா – இத்தனை கோடி விலையா..?

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை த்ரிஷா பல கோடி மதிப்புள்ள சொகு பங்களா ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் படங்களில் சில காலம் நடிக்காமல் இருந்து வந்த நடிகை திரிஷா ’பொன்னியின் செல்வன்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தரமான கம் பேக் கொடுத்தார் .

இதையடுத்து தளபதியுடன் லியோ என மாஸ் பட்ஜெட் படங்களில் நடித்த த்ரிஷா தற்போது கமல்ஹாசனின் ‘தக்லைஃப்’ படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் .

இந்த சிறப்பான கம் பேக் மூலம் தென்னிந்தியா திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக நடிகை த்ரிஷா வலம் வருகிறார்.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா ரூ. 17 கோடி மதிப்புள்ள ஒரு பிரம்மாண்ட சொகுசு வீடு ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் எந்த ஊரில் இந்த பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை.

த்ரிஷாவின் கைவசம் தற்போது பல மொழிகளில் ஏராளமான படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "Suriya 47 Begins! பூஜை புகைப்படங்கள் வெளியானதும் வைரலாகி Trending 🔥"

More in Cinema News

To Top