Connect with us

“தனது 75ஆவது படமான ‘அன்னபூரணி’ படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் இவ்வளவா?!”

Cinema News

“தனது 75ஆவது படமான ‘அன்னபூரணி’ படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் இவ்வளவா?!”

நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘அன்னபூரணி’. இதில் நயன்தாரா, நாயகியாக நடித்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது, அந்த ட்ரைலரில் ‘புடிச்சத பண்ணா லட்சத்துல ஒருத்தர் இல்ல, லட்சம் பேரும் சூப்பர் ஸ்டார்’ ஆகலாம் என தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் நயன்தாரா.

‘ராஜா ராணி’ படத்துக்குப் பிறகு ஜெய் – நயன்தாரா – சத்யராஜை ஒரே படத்தில் காண முடிகிறது. இப்படத்தில் அச்யுத் குமார், KS ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

டிசம்பர் 1-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அன்னபூரணி படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநரின் இனிய காதல் கதை, திருமணமாக மாறியது

More in Cinema News

To Top