Connect with us

“மன்சூர் அலி கானை நான் சும்மா விட மாட்டேன்..! கோபத்தில் கொந்தளிக்கும் நடிகை குஷ்பு!”

Cinema News

“மன்சூர் அலி கானை நான் சும்மா விட மாட்டேன்..! கோபத்தில் கொந்தளிக்கும் நடிகை குஷ்பு!”

முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை ஒரு ஹீரோவும் இதுவரை பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. இந்நிலையில், நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள நான் இந்த விவகாரத்தை சும்மா விடமாட்டேன் என மன்சூர் அலி கானை விளாசி உள்ளார்.

நடிகை த்ரிஷா பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்காமல் தப்பாக எடிட் செய்து போட்டு விட்டார்கள் என மன்சூர் அலி கான் அந்தர் பல்டி அடித்து விளக்கம் சொல்லி தப்பிக்க பார்த்துள்ளார். ஆனால், அவர் நடிகைகளை பலாத்கார காட்சியில் தான் எப்படி டீல் செய்து நடித்தேன் என குஷ்பு, ரோஜா உள்ளிட்ட நடிகைகளுடன் நடித்தது குறித்தும், நடிகை த்ரிஷாவுடன் தனக்கு அப்படியொரு சீன் இல்லை என்பது குறித்தும் பேசிய காட்சிகள் இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பெண்கள் என்றாலே மட்டமாக நினைத்து பேசும் எண்ணம் மன்சூர் அலி கானுக்கு எப்படி தோன்றியது. த்ரிஷாவிடம் மட்டும் இல்லை என்னிடமும் என்னுடன் நடித்த சக நடிகைகளிடமும் அவர் நிச்சயம் இதற்காக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என ட்வீட் போட்டு விளாசி உள்ளார்.

மேலும், தேசிய மகளிர் ஆணையத்தில் அங்கத்தினராக இருக்கும் நான், இதுதொடர்பாக மேலிடத்திற்கு செய்தியை அனுப்பி விட்டேன். நிச்சயம் மன்சூர் அலி கான் மீது நடவடிக்கை பாயும் என்றும் நடிகைகளை தவறாக எண்ணும் எண்ணம் இனியும் எவருக்கும் வரக் கூடாது என விளாசி உள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top