Connect with us

“சூர்யா மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் செட்டிலானது ஏன்?! இதற்கு ஜோதிகா சொன்ன பதில் என்ன தெரியுமா?!”

Cinema News

“சூர்யா மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் செட்டிலானது ஏன்?! இதற்கு ஜோதிகா சொன்ன பதில் என்ன தெரியுமா?!”

திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து, அதன்பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டிலானார் ஜோதிகா. திருமணத்திற்கு பின் நடிக்கவே வரமாட்டாரா என ரசிகர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. திருமணத்திற்கு பின் மகள், மகனுக்கு தாய்யான நடிகை ஜோதிகா அவர்களை பார்த்துக்கொள்வதில் கவனமாக இருந்தார்.

இதனால் சினிமாவில் ஜோதிகாவால் கவனம் செலுத்த முடியவில்லை. தன்னுடைய பிள்ளைகள் ஓரளவு வளர்ந்தபின் மீண்டும் சினிமாவில் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதன்பின் தொடர்ந்து பல படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில் திருமணத்திற்கு பின் நீங்க நடிக்க கூடாது என்று உங்களுடைய மாமனார் சிவகுமார் கூறியதாகவும், அதனால் தான் கணவர் சூர்யா மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் போய் செட்டிலாகி விட்டீர்கள் என போன்ற பல வதந்திகள் பரவியது.

இதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் கொடுத்த ஜோதிகா ‘அந்த வீட்டில் எனக்கு உறுதுணையாக இருந்ததே அப்பா சிவகுமார் தான். படப்பிடிப்பிற்கு செல்லும் போது குடும்பம் பிள்ளைகளை மறந்து, நடிப்பில் மட்டுமே தான் கவனம் செலுத்த வேண்டும் என கூறுவார்’.

‘கொரோனா தொற்று காலகட்டத்தில் என்னுடைய பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். என்னால் அடிக்கடி மும்பை சென்று அவரைகளை பார்த்துக்கொள்ள முடியவில்லை. இதை நான் சூர்யாவிடம் கூறினேன். அவரும் மும்பையில் குடியேற சம்மதம் தெரிவித்தார். இதனால் எங்கள் வீட்டில் எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை’ என கூறியுள்ளார் நடிகை ஜோதிகா.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top