Connect with us

நடிகர் விஷாலின் ரத்னம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது வெளியாகிறது தெரியுமா?!

Cinema News

நடிகர் விஷாலின் ரத்னம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது வெளியாகிறது தெரியுமா?!

ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவான ’ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, திருப்பதி என பல இடங்களில் நடந்தது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக விஷால் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ’ரத்னம்’ திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழ் புத்தாண்டு கும்பலில் இருந்து விஷால் தப்பித்து இரண்டு வாரம் கழித்து தனது ’ரத்னம்’ படத்தை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவில், பாலாஜி கலை இயக்கத்தில், ஜெ படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித் நடிக்கும் 'Good Bad Ugly' படத்தின் புதிய அப்டேட் வெளியானது..!!

More in Cinema News

To Top