Connect with us

கேரள ரசிகர்களின் கூட்டத்தின் நடுவே மலையாளத்தில் பேசிய நடிகர் விஜய் – வைரல் வீடியோ..!!

Uncategorized

கேரள ரசிகர்களின் கூட்டத்தின் நடுவே மலையாளத்தில் பேசிய நடிகர் விஜய் – வைரல் வீடியோ..!!

தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘The G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் கேரளா சென்றுள்ள நிலையில் அங்கு கூடிருந்த ரசிகர்களிடம் விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் . உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் திரைப்படம் தான் ‘The G.O.A.T’

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதியின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது இப்படம் குறித்த தாறுமாறு அப்டேட் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று விஜய் இருக்கும் இடத்தில் அதிக அளவு ரசிகர்கள் கூடிய நிலையில் அவர்களை விஜய் சந்தித்து பேசிருக்கிறார் .

திடீரென பஸ் மீது ஏறிய விஜய் ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “‘ஜனநாயகன்’ தாமதம் குறித்து ஜீவாவின் மனவருத்தம்”

More in Uncategorized

To Top