Connect with us

“மீண்டும் தள்ளிப்போனது விஜய் சேதுபதியின் முதல் பாலிவுட் படம்! புது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது..!”

Cinema News

“மீண்டும் தள்ளிப்போனது விஜய் சேதுபதியின் முதல் பாலிவுட் படம்! புது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது..!”

வருகிற 2024 ஆண்டு பொங்கல் தினத்தில் ஏற்கனவே பிரபலங்களின் படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்த படமும் பொங்கல் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’Lal Salaam’, தனுஷ் நடித்த ’Captain Miller’ சிவகார்த்திகேயன் நடித்த ‘Ayalaan’ மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’Aranmanai 4’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, காத்ரீனா கைப் நடித்த ‘Merry Christmas’ என்ற திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இது குறித்த புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி, காத்ரினா கைப், ராதிகா, சஞ்சய் கபூர், டினு ஆனந்த், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்த ‘‘Merry Christmas’ திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், இந்தியில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பை லைகா நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் ரஜினியின் கடைசி நடிப்பு!

More in Cinema News

To Top