Connect with us

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விஜய் மக்கள் இயக்கத்தினர் அழைப்பு விடுத்த நடிகர் விஜய்..!!

Cinema News

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விஜய் மக்கள் இயக்கத்தினர் அழைப்பு விடுத்த நடிகர் விஜய்..!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விஜய் மக்கள் இயக்கத்தினர் நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றுலா பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது . இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் தமிழக அரசின் செயல்பாட்டை பாராட்டி வந்தாலும் மறுபக்கம் மின்சாரம் இல்லாமல் இருளில் தத்தளித்து வருவதாக வசைபாடியும் வருகின்றனர்.

இந்த பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காக்கவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யம் திரை பிரபலங்கள் பலர் காலத்தில் இறங்கியுள்ள நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் விஜய்.

இதுகுறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

#கைகோர்ப்போம் துயர்துடைப்போம் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Box Office Success 💥 | ‘Tere Ishq Mein’ Collects ₹152 Cr Worldwide 🎬

More in Cinema News

To Top