Connect with us

10 வருடங்களுக்கு பின் நடிகர் விமலின் நடிப்பில் வெளியான ‘தேசிங்கு ராஜா’ படத்தின் 2 ஆம் பாகம்!

Cinema News

10 வருடங்களுக்கு பின் நடிகர் விமலின் நடிப்பில் வெளியான ‘தேசிங்கு ராஜா’ படத்தின் 2 ஆம் பாகம்!

அஜித் நடித்த ’ராஜா’ விஜய் நடித்த ’துள்ளாத மனமும் துள்ளும்’ உட்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் எழில். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ’யுத்த சத்தம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு விமல் நடித்த ’தேசிங்கு ராஜா’ என்ற திரைப்படத்தை எழில் இயக்கிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது அவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விமல் 2ஆம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகைகளான பூஜிதா பொனாடா மற்றும் ஹர்ஷிதா ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்க உள்ளதாக தெரிகிறது.

கல்லூரியில் படிக்கும் நான்கு நெருங்கிய நண்பர்கள் படிப்பு முடித்தவுடன் வெவ்வேறு பாதையில் செல்கின்றனர். மீண்டும் அவர்கள் சந்திக்கும் போது அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை காமெடியாக கூறுவது தான் இந்த படத்தின் கதை என்று தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘தக்லைஃப்’ படத்தில் கெத்தான என்ட்ரி கொடுத்த சிம்பு – வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top