Connect with us

நீங்க வேற லெவல் சார் : புயல் நிவாரண பணிகளில் ஈடுபடும் ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் வைத்த நடிகர் சூர்யா..!!

Cinema News

நீங்க வேற லெவல் சார் : புயல் நிவாரண பணிகளில் ஈடுபடும் ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் வைத்த நடிகர் சூர்யா..!!

புயல் நிவாரண பனிகளில் ஈடுபடும் ரசிகர்களுக்கு அன்பான அட்வைஸ் ஒன்றை வாய்ஸ் நோட் மூலம் கொடுத்துள்ள நடிகர் சூர்யாவின் ஆடியோ பதிவு தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது. .

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது . இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இன்னும் சில பகுதிகளில் வெள்ளம் வடியாமலே இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரை நட்சத்திரங்கள் பலர் களத்தில் இறங்கி உதவிகளை செய்து வரும் நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி முதல் ஆளாக 10 லட்சம் நிவாரணம் கொடுத்தனர் . இதையடுத்து தற்போது சூர்யாவின் ரசிகர்களும் தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நிவாரண பனிகளில் ஈடுபடும் ரசிகர்களுக்கு அன்பான அட்வைஸ் ஒன்றை நடிகர் சூர்யா கொடுத்துள்ளார்.

“தண்ணீலே பசங்க இறங்கி மக்களுக்காக உதவி பண்ணிட்டு இருக்காங்க , அவங்க நைட் தூங்க போகும் போது கால்களில் தேங்காய் எண்ணெய், மஞ்சள் பொடி கலந்து போட சொல்லுங்க. கால நல்ல சுத்தபடுத்த சொல்லுங்க” என அன்பான வேண்டுகோளை ரசிகர்களுக்கு வைத்துள்ளார் நடிகர் சூர்யா.

சூர்யாவின் இந்த வேண்டுகோள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளதாகவும் இணையத்தில் பல கருத்துக்களும் பாராட்டுகளும் உலா வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Nivetha Marriage Cancelled!? 💔 உண்மை என்ன? Shocking Update!

More in Cinema News

To Top