Connect with us

கையில் கட்டுடன் வசனம் பேசும் சூரி..! வைரலாகும் அதிர்ச்சி Video!

Cinema News

கையில் கட்டுடன் வசனம் பேசும் சூரி..! வைரலாகும் அதிர்ச்சி Video!

நடிகர் சூரி சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த நிலையில் கையில் கட்டுடன் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் முக்கிய இடத்தில் நடித்த ’விடுதலை’ ரிலீசாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது ‘விடுதலை 2’, ’கருடன்’, ’கொட்டுக்காளி’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ’கருடன்’ படத்தின் டப்பிங் பணி செய்யும் வீடியோவை சூரி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் அவர் டப்பிங் பேசும் போது கையில் கட்டுடன் உள்ளார். அந்த காயம் அவர் சமீபத்தில் படப்பிடிப்பு நடந்தபோது ஏற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

சூரி மற்றும் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ரோஷினி ஹரிப்பிரியன், சமுத்திரகனி, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த படத்தின் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுத, ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவினின் 'ஸ்டார்' படத்தை தாறுமாறாக புகழ்ந்த இயக்குநர் நெல்சன்..!!

More in Cinema News

To Top