Connect with us

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மாபெரும் கவுரவ விருது – எதற்காக தெரியுமா..?

Cinema News

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மாபெரும் கவுரவ விருது – எதற்காக தெரியுமா..?

திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உழவர்களின் தோழன் என்ற கவுரவ விருது வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத்தில் நாடகெங்கும் தனக்கென தனி பெயரை சம்பாதித்த நெல் ஜெயராமன் அவர்களின் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் பிரபல திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உழவர்களின் தோழன் என்ற விருது வழங்கப்பட்டது.

விருதை பெற்ற பின் மேடையில் பேசிய பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது:

இந்த விருதை இங்கு கொடுத்ததற்கு மிக மிக மகிழ்ச்சி. சில விருதுகள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும் , சில விருதுகள் சந்தோஷத்தை கொடுக்கும் , சில விருதுகள் புகழை கொடுக்கும், ஆனால் சில விருதுகள் மட்டும் தான் பெருமையை கொடுக்கும். அப்படிப்பட்ட விருதாக தான் இதை பார்க்கிறேன்.

உழவர்களின் தோழன் என்பது மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன். என்னால் முடிந்ததை நான் கடைசிவரை செய்து கொண்டிருப்பேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top