Connect with us

“மறைந்த நடிகர் விஜயகாந்துக்காக இந்த உதவியை செய்யப் போறேன்..! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட Viral Video!”

Cinema News

“மறைந்த நடிகர் விஜயகாந்துக்காக இந்த உதவியை செய்யப் போறேன்..! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட Viral Video!”

விஜயகாந்த் எப்படி பிறருக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவரோ அதேபோல ராகவா லாரன்ஸும் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். நடன இயக்குனராக சினிமாவில் அறிமுகமான ராகவா லாரன்ஸ் படிப்படியாக உயர்ந்து ஹீரோவாக மாறினார். முனி, காஞ்சனா வரிசை படங்களை இயக்கியும் நடித்தும் வசூலிலும் தனக்கான ஒரு தனி இடத்தை பெற்றுள்ளார்.

புரட்சி கலைஞர் என கொண்டாடப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் திரண்டு வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது. விஜயகாந்த் மறைவின் போது வர முடியாத சிலர், புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து சென்னை திரும்பிய நிலையில் தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷால், ஆர்யா உள்ளிட்ட பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வரும் காட்சிகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் தனது அம்மாவுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் விஜயகாந்த் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சினிமாவில் எத்தனையோ பேரை கரையேற்றி விட்டவர் விஜயகாந்த். அவரது மகன் சண்முக பாண்டியனுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்யலாம் என்கிற எண்ணம் தனக்குள் தோன்றியது என்றும் சண்முக பாண்டியன் நடித்துவரும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும், யாரிடமாவது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் தானும் சண்முக பாண்டினும் அந்தப் படத்தில் நடிக்க தயார் என்றும் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், இளைய மகன் சண்முக பாண்டியனுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்யப் போவதாக அறிவித்து இருக்கிறார் ராகவா லாரன்ஸ். சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் படம் ரிலீசுக்கு தயாராகி ரொம்ப நாட்களாக கிடப்பில் உள்ள நிலையில், அந்த படத்தில் கேமியோ ரோலில் நடிப்பாரா? அல்லது புதிய படத்தில் நடிப்பாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

See also  நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 300 நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்த கார்த்தியின் ரசிகர்கள் முடிவு..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top